அதிகாரம் -1
கிறிஸ்தவனாக வாழ்வது என்பது நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் கடவுளுக்கென்று கொடுப்பதே. இது ஆலயத்திற்குச் செல்வதும் ஜெபிப்பதும் மட்டுமல்ல, ஆனால் நம்முடைய வாழ்க்கை முழுவதையும் கடவுளுக்குக் கொடுத்துவிடுவதே. கிறிஸ்தவனுக்குச் சபை கூடுதலும் ஜெபம் பண்ணுவதும் முக்கியமானதுதான். ஆயினும் இவைகள் கிறிஸ்துவின் வாழ்வில் ஒரு பகுதியே. ஒருவன் உண்மையான கிறிஸ்துவனாயிருக்க வேண்டுமெனில் தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் கிறிஸ்தவனாக வாழ்தல் வேண்டும்.
ஒரு கிறிஸ்துவன் என்பவன் கடவுளால் ஆளப்படுகிறவன். கடவுளே கிறிஸ்தவுனுடைய வாழ்க்கையின் அரசராக இருக்கிறார் . கிறிஸ்தவன் தனக்கு அல்ல, கடவுளுக்கே பிரியமாயிருக்க விரும்புகிறான் என்பதுவே இதன் அர்த்தம் . எனவே கடவுள் சொன்னபடி செய்யவும் கடவுளைப் பற்றி நினைக்கவும் எல்லா நேரங்களிலும் கடவுளை சேவிக்க விரும்புகிறான்
ஒரு கிறிஸ்துவன் ஏன் ஜெபிக்கிறான்? ஜெபிப்பதற்கு அநேக காரணங்கள் உண்டு. ஆனால் இரண்டை மட்டும் நாம் சிந்திப்போமாக. முதலாவது அவன் கடவுள் எவ்வளவு அதிசயமானவர் என்பதைச் சொல்ல விரும்புகிறான். ஒரு கிறிஸ்துவன் தன்னுடைய ஜெபத்தில் கடவுளை துதிக்கிறான். கடவுள் அவனுடைய தகப்பனாய் இருக்கிறார் . கிறிஸ்தவன் பாவத்திலிருந்து மீட்கப்பட்டு கடவுளிடத்திற்குக் கொண்டுவரப்பட்டவன் . அவனுடைய பாவங்களுக்காக இயேசு கிறிஸ்து மரித்திருக்கிறார். இப்பொழுது பரிசுத்த ஆவியானவராகிய கடவுள் அவனுக்குள் வாழ்ந்து அவனை ஒரு புதிய ஆளாக உருவாக்குகிறார். ஆகையால் கிறிஸ்தவன் கடவுளைத் துதிக்க விரும்புகிறான்
மதப்பற்றுள்ள மக்களிடம் தவறு இருக்க வேண்டும். அதிசயமும் மகா உன்னதமுமான கடவுளை அவர்கள் உண்மையில் நம்புவார்களானால் தங்கள் முழு வாழ்க்கையிலும் அவரை துதிக்கக் விரும்ப வேண்டும் .
கடவுளின் சித்ததை மட்டும் செய்ய வேண்டும் என மெய்யாகவே ஜெபிப்பார்களானாள், அவர்கள் எல்லா நேரத்திலும் கடவுளுக்கு கீழ்ப்படிய வேண்டும் . ஆலய ஆராதனையில் கடவுளைத் துதிக்க சென்று அதை முடித்து வெளி வந்த பின்னர் கடவுளுக்காக வாழாமல் இருப்பது உம்மால் கூடாத காரியம். கடவுள் எத்தனையும் மேன்மையும்,அருமையுமானவர் என்பது உமக்குத் தெரியும், ஆகவே உம் வாழ்க்கை முழுவதிலும் நீர் கடவுளை கனம் பண்ணவேண்டும் என்று ஒருவரும் உமக்குச் சொல்ல அவசியமில்லை. நீர் உமது வாழ்க்கை முழுவதையும் கடவுளுக்குக் கொடுக்கிறீரா? நீர் உமது வாழ்க்கை முழுவதும் கடவுளால் ஆளப்பட்டிருக்கிறது என்பதை அது குறிக்கிறதா?
புதிய ஏற்பாடு ஒரு கிறிஸ்தவனாக வாழ்வதைப்பற்றி கூறுகிறது. 1 கொரி 10:31-ல் அப்போஸ்தலனாகிய பவுல் இவ்விதமாக கூறுகிறார் . " நீங்கள் புசித்தாலும் குடித்தாலும் வேறெதைச் செய்தாலும் எல்லாவற்றையும் கடவுளின் மகிமைக்கென்றே செய்யுங்கள்" கவனிக்கவும் எதை செய்தாலும் கடவுளின் மகிமைக்கென்றே செய்யுங்கள். நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் கடவுளுக்குத் துதியைக் கொண்டு வரவேண்டும் என்பதே அர்த்தமாகும். கொலோசெயருக்கு எழுதின கடிதத்திலும் இதே விதமாகதான் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார் 3 : 17 " எதைச் சொன்னாலும், எதை செய்தாலும் ஆண்டவராகிய இயேசுவின் மூலம் பிதாவாகிய கடவுளுக்கு நன்றி செலுத்தி அவரது திருப்பெயரால் செய்யுங்கள் . ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலே அனைத்தையும் செய்வது என்பது எல்லா நேரத்திலும் கடவுள் விரும்புகிற முறையிலே வாழ்வதேயாகும்.