அதிகாரம் - 2
ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய வாழ்வின் ஓவொரு பகுதியிலும் தேவனை பிரியப்படுத்த விரும்புகிறான். எல்லா சமயங்களிலும் தேவனை மகிழ்விக்கவிரும்புவதென்பது நம்முடைய வாழ்வில் வித்தியாசத்தை ஏற்படுத்தியே தீர வேண்டும். எல்லாரும் எல்லா சமயங்களிலும் தேவனை மகிழ்விக்க விரும்பினார்களானால் அது எப்படி இருக்கும் என்பதைச் சற்று கற்பனை செய்வோமாக. அது அனுதின வாழ்க்கையை முற்றிலும் மாற்றி அமைக்கும் . உதாரணமாக : மக்கள் ஒருவரை ஒருவர் நம்புவார்கள் எவ்விதமான பொய்யோ, ஏமாற்றமோ இராது. வியாபாரத்திலும், வேலையிலும் எல்லாம் உண்மையாகவும், நம்பிக்கைக்குரியதாகவும் காணப்படும். மக்கள் ஒருவறைக்கோருவர் வித்தியாசமாகப் பேசிக்கொள்வர். எவ்விதமான பழித்துக் கோருதலோ, கசப்புத்தன்மையோ, கோபமோ இராமல் அன்பும், உதவியும், ஆறுதலுமான வார்த்தைகளும் பேசப்படும். அத்தகைய உலகை உன்னால் கற்பனை செய்ய முடிகிறதா? அது நிச்சயமாக ஓர் அதிசயமான இடமாகத்தான் இருக்கும்